
சிகிச்சை செய்வதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது!
ஆம்பூர் (11 மார்ச் 2022): நண்பனின் மனைவிக்கு மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் அத்துமீறியவர் கைது செய்யப்படுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சல்மான். இவர் காலனி தொழிற்சாலையில் பணி செய்துவருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சல்மானின் மனைவிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் சல்மானின் நெருங்கிய நண்பரான துத்திபட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஷபிக்…