
ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!
சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்…