
ஓபிஎஸ்-இபிஎஸ் என்னை கட்டுப்படுத்த முடியாது – ஓபிஎஸ் தம்பி பரபரப்பு பேட்டி!
தேனி (05 மார்ச் 2022): ”அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமைதான் தேவைப்படுகிறது. என் விருப்பப்படியே சசிகலாவைச் சந்தித்தேன்” என்று ஓ.ராஜா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்களைச் சந்திப்பதற்காக சசிகலா பயணம் மேற்கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். இதனால் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓ.ராஜாவோடு சசிகலாவைச் சந்திக்கச் சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி ஆகிய மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த…