
அம்மாவின் அரசியல் வாரிசு -அனல் பறக்கும் தேனி!
தேனி (05 அக் 2020): நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேனியில் நாளைய முதல்வர் ஓபிஎஸ் என 100 அடி நீளத்திற்கு பிளக்ஸ் அமைத்து அம்மாவின் வாரிசு என கோஷமிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்ட சபை தேர்தலையொட்டி அரசியல் வியூகங்கள் நகர தொடக்கி விட்டன. களத்தில் அதிமுகவா? திமுகவா? என்ற போட்டியை விட, அதிமுகவில் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற குழப்பங்கள் தொண்டர்களுக்கிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி…