
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் உயர் ஜாதியினரால் அடித்துக் கொலை!
ஃபிரோசாபாத் (26 ஏப் 2022): உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, உயர் சாதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெய் சிங் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் நரேன் கூறுகையில், இந்த சம்பவ தொடர்பாக 6 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்”…