கத்தாரில் பள்ளி பேருந்தில் இந்திய சிறுமி மரணம்!

தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா. இவர் கத்தார் அல்வக்ராவில் உள்ள ஸ்பிரிங் ஃபீல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கேஜி ஒன் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை பேருந்தில் தூங்குவதை கவனிக்காத ஊழியர்கள் மற்ற குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டு பஸ்சை பூட்டினர். மதியம் தனது குழந்தைகளை வீட்டிற்கு…

மேலும்...

கத்தரில் சட்டமன்றத் தேர்தல்!

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கத்தரில் சட்டமன்றத்துக்கான 30 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்குரிய தேர்தல் நடைபெற உள்ளது. அமீருக்கான ஆலோசனை குழு-ஷூரா கவுன்ஸில்- என்றிருந்ததை, அரசில் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கத்தர் வரலாற்றில் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், இந்த ஆலோசனை குழுவின் உறுப்பினர்களை அமீரே நேரடியாக தேர்வு செய்வார். தற்போதைய மாற்றப்படி, முன்னர் அமீருக்கு இருந்த அதிகாரம் அப்படியே தொடரும். அதன்படி, 15 உறுப்பினர்களை அமீர்…

மேலும்...

தலிபானுக்கும் உலகுக்குமிடையிலான பாலமாக கத்தர்!

காபூல்(14/09/2021): தலிபானுக்கும் உலகத்துக்கும் இடையிலான பாலமாக கத்தர் செயல்படும் என தலிபான் கலாச்சாரக்குழு உறுப்பினர் சயீது கூறியுள்ளார். கத்தர் வெளியுறவுதுறை அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆப்கானிஸ்தான் வந்து பிரதமர் முல்லா முஹம்மது ஹஸன் உட்பட தலிபான் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். முன்னாள் பிரதமர் ஹமீத் கர்ஸாயி மற்றும் தேசிய மறு சீரமைப்பு தலைமை குழு தலைவர் அப்துல்லாஹ்வுடனும் தனித்தனியாக சந்திப்பு நடத்தியிருந்தார். உலக நாடுகளுடன் தலிபான்களின் உறவை மேம்படுத்துதல்,…

மேலும்...

இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!

கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது. இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும். Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம். இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.    

மேலும்...

கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! கத்தார் அரசு அதிரடி அறிவிப்பு

தோஹா (06 நவம்பர் 2020): கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி, கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (Ministry of Public Health) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில்…

மேலும்...

இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்!

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுசபை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கத்தர் அமீர், அரபு பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தும் அராஜகங்களுக்கு முடிவு கொண்டு வரும் விசயத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச நிறுவனங்களும் கண்மூடி இருப்பதற்குக் கண்டனம்…

மேலும்...