முஸ்லிம்களிடம் எவரும் காய்கறி வாங்குவதில்லை – முஸ்லிம் வியாபாரிகள் புகார்!
லக்னோ (15 ஏப் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று இந்துக்கள் அறிவித்துள்ளதாக முஸ்லிம் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் மொஹோபா பகுதியில் இரு முஸ்லிம் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் தப்லீக் ஜமாத் மக்கள் இருப்பதால், எங்களிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று அப்பகுதி இந்துக்கள் அறிவித்துள்ளதால் எங்களுக்கு காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று புகார் அளித்துள்ளனர்….