குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ஐதராபாத் (16 மார்ச் 2020): குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று கூடிய தெலுங்கானா சட்டசபையில் சிஏஏ என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டசபையில் பேசியபோது, சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.