மத்திய பாஜக அரசின் மற்றுமொரு சாதனை – ராகுல் காந்தி சாடல்!
புதுடெல்லி (16 அக் 2020): மத்திய அரசின் மற்றும் ஒரு சாதனையாக கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானோடு போட்டி போட முடியவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தவறிவிட்டதாகவும் பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான்,…