கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், டிசிஜிஐ தலைவர் மற்றும் பலருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் அளித்த தனது மனுவில், “கோவிட்-19…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ஒன்றிய அரசு பதில்!

புதுடெல்லி (17 ஜன 2022): யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்லை என்று ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ‘ மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடத்தில் காண்பிக்கும் கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு…

மேலும்...

4 வருடமாக படுக்கையில் கிடந்த நோயாளி கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எழுந்து நடக்கத் தொடங்கிய அதிசயம்!

பொகாரோ (15 ஜன 2022): ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக படுக்கையில் இருந்த ஒருவர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார். பொகாரோவின் பெடார்வார் கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளானார். விபத்தைத் தொடர்ந்து அவர் குரல் இழந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் கிடந்தார். இந்நிலையில் துலர்சந்த் ஜனவரி 4 அன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசியைப் பெற்ற ஒரு நாளுக்குப்…

மேலும்...

11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் கைது!

பாட்னா (09 ஜன 2022): பிகாரில் ஒரே வருடத்தில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரில் 84 வயது முதியவர், கடந்த ஒரு வருடத்தில் 11 முறை கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் கிருஷ்ண பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்பவர் மீது புரைனி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்திய…

மேலும்...

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்று முதல் தொடக்கம்!

புதுடெல்லி (03 ஜன 2022): நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது….

மேலும்...

மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

புதுடெல்லி (28 டிச 2021): இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. இந்த…

மேலும்...

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வது எப்படி?

புதுடெல்லி (27 டிச 2021): வரும் 2022, ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த முன்பதிவு ஆரம்பமாகிறது. இத்தகைய சூழலில் முன்பதிவு செய்து கொள்வது எப்படி என்பதை அரசு விவரித்துள்ளது. CoWIN தளத்தின் தலைமை நிர்வாகி மருத்துவர் ஆர்.எஸ்.ஷர்மா அதனை விவரிக்கிறார். “மாணவர்களிடம் ஆதார் அல்லது இதர அடையாள அட்டைகள் ஏதேனும் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் சிறார்கள் பத்தாம் வகுப்பு அடையாள அட்டையை கொண்டும் CoWIN தளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம்….

மேலும்...

கோவிட் தடுப்பூசி மூன்றாவது டோஸுக்கான இடைவெளி எத்தனை மாதங்கள்?

புதுடெல்லி (26 டிச 2021): கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும் மூன்றாவது டோஸுக்கும் இடையிலான இடைவெளி ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளில் உள்ள இடைவெளிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை இரவு…

மேலும்...

ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் – அதிர்ச்சித் தகவல்!

நியூசிலாந்து (13 டிச 2021): நியூசிலாந்தில் ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், புதிய மாறுபாடான ஒமிக்ரானுக்கு எதிராக பாதுகாக்கும் நோக்கில், சில நாடுகள் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் (Omicron) பீதிக்கு மத்தியில் தடுப்பூசிகள்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் மரணம் – அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (08 டிச 2021): இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி நம் நாட்டில் 4,73,537 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று காலை வரை, 128.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி…

மேலும்...