CORONA-India

இந்தியாவில் சரியும் கொரோனா தொற்று!

புதுடெல்லி (25 ஜன 2022): இந்தியாவில் இன்றும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 50,190 குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,67,753 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 22,36,842 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை…

மேலும்...

ஐரோப்பாவில் முடிவுக்கு வரும் கொரோனா தொற்று!

ஜெனிவா (24 ஜன 2022): தற்போதைய ஒமிக்ரான் அலை தணிந்தவுடன் ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவின் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹேன்ஸ் க்ளட்ஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் மார்ச் மாதத்திற்குள் 60 சதவிகிதம் பேருக்கு பரவும் என அவர் குறிப்பிட்டார். இந்த அலை குறைந்தவுடன் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால்…

மேலும்...

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

ஐதராபாத் (24 ஜன 2022): துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கையா நாயுடு ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று துணை ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். நாயுடுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் அவருக்கு கொரோனா இருக்கும் செய்தியை உறுதிப்படுத்தினார். மேலும் அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (19 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகள் ஓய்ந்த நிலையில், தற்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் மூன்றாம் அலையாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, முழு பொதுமுடக்கம் ஆகிய…

மேலும்...

சவுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் உம்ராவுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பு!

ரியாத் (18 ஜன 2022): சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உம்ரா யாத்ரீகர்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு உம்ராக்களுக்கும் இடையில் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் 30 நாட்களில் மூன்று முறை மட்டுமே உம்ரா செய்யலாம். முன்னதாக, சவுதி அரேபியாவிற்குள் உள்ளவர்கள், உம்ராவை ஒருமுறை நிறைவேற்றிய 10 நாட்களுக்குப் பிறகு மட்டுமே இன்னொரு…

மேலும்...

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி விடுமுறை!

சென்னை (16 ஜன 2022): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல்9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும்…

மேலும்...

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 ஜன 2022): நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து…

மேலும்...

இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி(13 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நேற்றையதை விட 50,000-க்கும் அதிகமான வழக்குகள் அதிகரித்ததன் மூலம், இந்தியா சுமார் எட்டு மாதங்களில் முதல் முறையாக 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் புதன்கிழமை சுமார் 10,000 புதிய வழக்குகளுடன் அதிக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 ஐ ஒரு தொற்றுநோயாகக் கருதாமல், காய்ச்சல் போன்ற ஒரு உள்ளூர்…

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.79 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (10 ஜன 2022): இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புத் தொடர்பான விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,57,07,727 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…

மேலும்...

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் விற்பனை!

சென்னை (09 ஜன 2022): நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மது வாங்க குவிந்துள்ளனர். அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும்,…

மேலும்...