காலியாகும் பாஜக கூடாரம் – பாஜக அமைச்சரை தொடர்ந்து சமாஜ்வாதியில் இணையும் 13 எம்.எல்.ஏக்கள்!
லக்னோ (11 ஜன 2022): உ.பி. தொழிலாளர் துறை அமைச்சர், பா.ஜ.வில் இருந்து விலகியதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதிமூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். உத்தரபிரதேச தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, அமைச்சரவை மற்றும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்ததை அடுத்து இந்த தகவலை சரத் பவார் தெரிவித்துள்ளார். “உத்தரபிரதேசத்தில், நாங்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும்…