அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை!
புதுடெல்லி (24 ஏப் 2020): தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரகால இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், சாமியார்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக, தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கியதாக, திரு. அர்னாப் கோஸ்வாமியும் புகாரளித்தார். இந்நிலையில்,…