பாஜகவுடன் ரகசிய கூட்டணி – நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி!
பாட்னா (11 நவ 2020): பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்து நிதிஷ் குமார் கட்சியை மூன்றாவது நிலைக்கு தள்ளியுள்ளது லோக் ஜனசக்தி. பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான…