குறுகிய காலத்தில் 6,000 கிமீ தூரம் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த சுஃபியா கான்!
புதுடெல்லி (30 மார்ச் 2022): 6,002 கிமீ தூரத்தை 110 நாட்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் ‘தங்க நாற்கரத்தில்’ கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த சுஃபியா கான். தங்க நாற்கரம் என்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் தொடராகும். தடகள வீராங்கனையான சுஃபியா கான், டிசம்பர் 16, 2020 அன்று தேசியத் தலைநகரில் இருந்து தனது ஓட்டத்தைத் தொடங்கி, ஏப்ரல் 6, 2021க்குள் தங்க நாற்கர…