செங்கோட்டையில் தேசிய கொடிக்கு பதில் காவி கொடி ஏற்றுவோம் – பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து!
பெங்களூரு (10 பிப் 2022): எதிர்காலத்தில் செங்கோட்டையில் தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி ஏற்றப்படும் என கர்நாடக பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப்…