திமுகவை வீழ்த்த எடப்பாடியுடன் கைகோர்க்க சசிகலா திட்டம்!
சென்னை (09 பிப் 2021): எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிரி அல்ல திமுகவே எதிரி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள்….