தமிழக அமைச்சரின் மனைவி மரணம்!
சென்னை (28 ஆக 2020): தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச் செல்வி சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். அவரது உடலை அமைச்சரின் சொந்த ஊருக்குச் சென்று இரவு இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது.