சுரேந்தினுக்கு ஒரு நீதி.. எஸ்.வி.சேகருக்கு ஒரு நீதியா..? பாயும் பால் முகவர்கள்!
சென்னை (18 ஜூலை 2020): “பெரியாரிஸ்டுகள் மீது புலிப்பாய்ச்சல் பாயும் அரசு, இந்துத்துவா நபர்கள் மீது ஆமை நடை நடப்பது ஏன்?” என்று பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடவுள் மறுப்பு, பெரியாரிசம் எனும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும், பக்தி மார்க்கங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது ஏற்புடையதல்ல. அதிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு என்கிற பெயரில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் இலக்கு வைத்து செயல்படுவது…