ரியாத் தமிழர்களை மகிழ்வித்த தமிழர் திருநாள்!

ரியாத் (29 ஜன 2020): தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் என்ற முழக்கத்துடன் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் விழாவை, ரியாத்திலுள்ள கஸர் அல் அரப் (அரபகக் கோட்டை) மண்டபத்தில் கடந்த 24 ஜனவரி அன்று நடத்தியது. 2000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத் தலைவர் அருண் சர்மா விழா…

மேலும்...

தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை (15 ஜன 2020): தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் புது வண்ணம் பூசியும், அலங்காரத் தோரணங்களைக் கட்டியும், வண்ணக் கோலமிட்டும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் உறவினர்கள், நண்பர்கள் சூழ இணைந்து கொண்டாடுகின்றனர்.

மேலும்...