ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை!

காபூல் (23 ஆக 2021): காபூல் விமான நிலையத்தின் வடக்கு நுழைவு வாயிலில், ஆப்கன் வீரர்களும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்தநிலையில், ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அமெரிக்க மற்றும் ஜெர்மன் இராணுவ வீரர்களும் இணைந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த…

மேலும்...

தாலிபானை ஆதரிக்கும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வலியுறுத்தல்!

புதுடெல்லி (23 ஆக 2021): தாலிபானை ஆதரித்ததற்காக அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து ரிபப்ளிக் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் ஒன்றில் “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சமூக வலைதளங்களில்…

மேலும்...

என்ன நடக்குமோ ஏது நடக்குமோ – பரபரப்பில் காபூல்!

காபூல் (16 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படையின் பெரும் பகுதி வெளியேறிவிட்ட நிலையில் 6 ஆயிரம் வீரர்கள் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். அவர்கள் தற்போது விமான நிலையத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாட்டில் விமான நிலையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் முக்கிய கட்டிடங்கள் அனைத்தையும் சில மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்….

மேலும்...