அனைத்து நிறுவனங்களும் இந்தியாவைக் கைவிட்டு விட்டன – உச்சநீதிமன்ற பார் தலைவர்!
வயர் இணைய இதழில் கரண் தாப்பர் உச்ச நீதிமன்ற பார் அசோஷியேசனின் மேனாள் தலைவர் துஷ்யந்த் தாவேவை பேட்டி கண்டுள்ளார். கோவிட் பேரலை சூழ்ந்துள்ள மிக மோசமான சமயத்தில் மோடி அரசு எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கைவிட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கும் தாவே, இந்த தருணத்தில் திருவாளர் மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியைத் துரத்துவதாகவே அமைந்துள்ளது என்கிறார்.. இதை விரிவாக விளக்கும் போது இந்த ஆளுகையின் முக்கிய குறைகளாக அவர் குறிப்பிடும் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்….