தினமணியின் நேர்கொண்ட பார்வை தகனம் செய்யப் பட்டுவிட்டது – ஜவாஹிருல்லா பகிரங்க கடிதம்!
சென்னை (04 ஏப் 2020): மததுவேஷத்துடன் வந்துள்ள தினமணியின் தலையங்கத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா தினமணிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதுகுறித்த அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ‘மன்னிக்கக்கூடாத குற்றம்’ என்ற தலைப்பில் 4.4.2020 தேதியிட்ட தினமணியின் தலையங்கம், உண்மைக்குப் புறம்பானதாகவும், மதவெறுப்பை விதைப்பதாகவும் அமைந்துள்ளது. மனிதகுலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாகக் கிளம்பியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா தீநுண்மிக்கெதிராக சாதி, மத, தேச எல்லைகள் கடந்து உலகு தழுவிய அளவில் மனித சமுதாயம்…