பாஜகவுக்கு எதிரான அலை – காங்கிரஸ், திரிணாமூல் கூட்டணிக்கு வாய்ப்பு!

கோவா (13 ஜன 2022): கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அலை தோன்றியுள்ளது. கோவாவில் பாஜக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஊழல் என பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்கும் சக்தி எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்பதே உண்மை. ஆட்சிக்கு எதிரான கருத்து சாதகமாக இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிக்க…

மேலும்...

திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பஜகவுக்கே சாதகம் – சிவசேனா!

புதுடெல்லி (10 ஜன 2022): கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் நிலைப்பாடு பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து நம்பிக்கையற்ற தலைவர்களை தன் பக்கம் இழுத்துள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று சிவசேனாவின் முகப்புத்தகமான சாம்னாவில் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்காக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக அளவில் செலவு செய்வதாகவும், அக்கட்சி செலவழித்த நிதி எங்கிருந்து வந்தது என்றும்…

மேலும்...

காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!

புதுடெல்லி (16 ஆக 2021): காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவி சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் சுஷ்மிதா தேவ் மிக முக்கியமான தலைவர் ஆவார். முன்னதாக அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் பதவி விலக்கலுக்கான எந்தக் காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்தாகக்…

மேலும்...

கவிழும் அபாயத்தில் பாஜக ஆட்சி!

திரிபுரா (17 ஜூன் 2021): திரிபுரா மாநிலத்தில் ஒன்பது பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஆளும் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய், பாஜகவில் இணைந்தார். அதேநேரத்தில் திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு முகுல் ராயே…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...