கோவிட் மேல் சிகிச்சைக்காக முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

புதுடெல்லி (28 டிச 2020):: கோவிட் 19 பாதிப்பால் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், சிறப்பு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் டெஹ்ராடூன் டூன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். “ராவத்தின் உடல்நிலை குறித்து நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை” என்று மருத்துவமனையின் முத்த அதிகாரி டாக்டர் நோடல் கூறியுள்ளார் . இதுவரை உத்தரகண்ட் மாநிலத்தில் கோவிட் 19 பாதிப்பால் 89,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,400 பேர் இறந்துள்ளனர்.

மேலும்...