பட்டப்படிப்பு பயின்றாலும் துப்புரவு பணி செய்வதில் மகிழ்ச்சி – நெகிழ வைக்கும் மாணவி!
கோவை (07 மார்ச் 2020): கோவையில் எம்.எஸ்.ஸி பயின்று வரும் மாணவி துப்புரவு பணியாளராக தேர்வாகியிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்….