துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

துருக்கியை நிலைகுலையச்செய்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர்…

மேலும்...

மூன்றாக நொறுங்கிய விமானம் – 176 பயணிகள் உயிர் பிழைத்த அதிசயம்!

இஸ்தான்பூல் (06 பிப் 2020): துருக்கி விமானம் ஒன்று பயங்கர விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது….

மேலும்...

BREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு 08:55 ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரான் லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

மேலும்...