தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!

சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து…

மேலும்...

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு மக்கள் தூதர் விருது!

சென்னை (29 ஜூன் 2020): ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு லண்டனில் உள்ள உலக மனிதநேய அமைப்பு சார்பில் கொரோனா பணிக்காக சிறந்த மக்கள் தூதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : இங்கிலாந்து நாட்டின் தலைநகரமாக உள்ள லண்டனில் தலைமையிடமாக கொண்ட உலக மனித நேய அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே….

மேலும்...

தவறே செய்யாதவர்களை சிறையில் அடைத்தது யாரை திருப்திப் படுத்த? -நவாஸ் கனி கேள்வி!

சென்னை (12 ஏப் 2020): இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது, என்று இ.யூ முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த 8 பேர் (4 பெண்கள்) உட்பட 11 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. ஊரடங்கு உத்தரவு வருவதற்கு…

மேலும்...