
கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!
திருவனந்தபுரம் (18 ஆக 2020): கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 20 வீடுகள் நிலச்சரிவில் முழுவதும் சேதமானது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பத்து நாட்களைக் கடந்தும் இன்னும் மீட்புப்பணி நடைபெற்றுவரும் நிலையில், தினமும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்பகுதியில்…