
ஆளுநர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!
சென்னை (05 பிப் 2022): தமிழக ஆளுநர் அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது. இதில் 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…