ஃபேஸ்புக்கில் தீ
அமெரிக்காவில் பரவியுள்ள நெருப்பு ஃபேஸ்புக் நிறுவனத்தையும் சுட ஆரம்பித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பரை வெள்ளை இனக் காவலர் டெரெக் கைது செய்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் ஏறி அமர்ந்து கொன்றுவிட, உருவான தீப்பொறியால் போராட்டம், கலவரம், மறியல், சூரையாடல் என்று நாடு அதகளப்பட்டுக் கிடக்கிறது. நாளுக்கு நாள் உக்கிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது கருப்பர்களின் நீதிக்கான ஆர்ப்பாட்டம். ஆண்டாண்டு காலமாய்த் தாங்கள் நசுக்கப்படுவது பொறுக்காமல் மீண்டும் வெகுண்டெழுந்துள்ளார்கள் அம்மக்கள். மிக மிக முக்கியமானப் பிரச்சனையான இதை…