பாப்புலர் ஃப்ரெண்ட் நிர்வாகி படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு!
கோழிக்கோடு (15 ஏப் 2022): கேரளாவில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சுபைர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் என பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிபி முகமது பஷீர் கூறுகையில். எலப்புள்ளி பாரா வட்டாரத் தலைவர் சுபைர், வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து தந்தையுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கார் மோதி கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்….