
இறங்கி வருமா காங்கிரஸ் தலைமை? – கொந்தளிக்கும் தலைவர்கள்!
புதுடெல்லி (11 மார்ச் 2022): ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. உள்கட்சிக்குள்ளும் எதிர்க்குரல்கள் எழ தொடங்கியுள்ளன. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்த நிலையில் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் ஆட்சியமைக்க முடியாமல் போனது. தற்போது 2 மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இரண்டு மக்களவைத் தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்….