மோசமான நிலையில் தமிழ் சினிமா – விஜய் பட இயக்குனர் ஆதங்கம்!

சென்னை (21 ஏப் 2022): அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா மோசமாக உள்ளதாக விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விழா ஒன்றில் பேசுகையில், மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஹிட் படம் பண்ண தான் ஆவலுடன் இருப்பதாக இயக்குநர் பேரரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். விஜய்க்காக 3 கதைகள் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், இன்றைய சூழலுக்கேற்ப அந்த படத்தின் கதைகள் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்போதெல்லாம்…

மேலும்...

திரைத்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கை – ஜவாஹிருல்லா!

சென்னை (19 ஏப் 2022): மனிதநேய மக்கள் கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த, சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்ககக் கோரியிருந்தார். இந்நிலையில் தி.இந்து இதழிற்கு அளித்த பேட்டியில் இது தமிழ் திரையுலகிற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என தெரிவித்துள்ளார்.. அவரது பேட்டி: ஏன் பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள்? நான் படத்தைப் பார்க்கவில்லை,…

மேலும்...

படு குப்பையாகிப் போன பீஸ்ட் – படத்தை தூக்கும் திரையரங்குகள்!

சென்னை (16 ஏப் 2022): கதையில்லாமல் மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் ஓடிவிடும் என்ற கணக்கு பீஸ்ட் படத்தில் தவறாகிப் போனது படக்குழுவினருக்கு. படம் வெளியான முதல் காட்சியிலேயே படத்திற்கு எதிராக கிளம்பிய பாதக விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் விற்பனை ஸ்தம்பித்துப் போனது. தமிழ்நாட்டில் பீஸ்ட் ஓடினாலே போதும் என நினைத்த நடிகருக்கு போட்டியாக வந்த பக்கத்து மாநில படம் கே.ஜி.எப்.-2, மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்களும் திடீரென காட்சிகளை குறைத்து கேஜிஎப் படத்துக்கு…

மேலும்...

தீவிரவாதிகளை எத்தனை படங்களில் அழிப்பீர்கள்? -பீஸ்ட் விமர்சனம்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் பார்த்தவர்கள் ஏன் பார்த்தோம் என்கிற அளவுக்கு சலிப்பு தட்டுவதாக கூறுகின்றனர். விஜய் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லையாம். காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போட்டுள்ளார் வீர ராகவன் விஜய், ஆனால் அதை கைவிடும்படி உத்தரவு வர அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார் விஜய். எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. இதனால் விஜய்…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி பால் முகவர்கள் முதல்வருக்கு கோரிக்கை!

சென்னை (07 ஏப் 2022): “நடிகர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கவும், வன்முறை செயலில் ஈடுபடும் அவரது ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜய் நடித்த #பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை…

மேலும்...

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத்தில் தடை!

குவைத் (05 ஏப் 2022): விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில், குவைத் அரசாங்கம் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், பணயக்கைதிகள் திரில்லர். குவைத்தின் நலன்களுக்கு எதிரான முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல்  பீஸ்ட் திரைப்படம் காட்டுவதால். படத்தை தடை செய்ய அரசு முடிவு செய்தது. முன்னதாக, துல்கர் சல்மானின் குருப் மற்றும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படங்களும் அங்கு தடை செய்யப்பட்டன. பீஸ்ட் திரைப்படம்…

மேலும்...

இணையத்தில் கசிந்தது விஜயின் பீஸ்ட் பட காட்சிகள்!

சென்னை (01 மார்ச் 2022): விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் சிறு காட்சிகள் மற்றும்…

மேலும்...