
எந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது!
சேலம் (26 மே 2020): புதுமணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் திருமணம் முடிந்த உடனே தம்பதிகள் இருவரும் தனிமைப் படுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த பையனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், நேற்று முன் தினம் ( மே 24) நடக்க இருந்தது. இருவரும், கெங்கவல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா…