
அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி!
புளோரிடா (02 பிப் 2020): அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர் மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர். விக்டரி நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிற்பகல் 2:30 மணியளவில் மர்ம நபர் திடீரென தனது துப்பாக்கியால் 13 முறை சுட்டார். இதில் ஒரு ஆண் மற்றும் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு சிறுமி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….