மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!
மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல்…