வெளிநாட்டில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு உண்டா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

புதுடெல்லி (02 பிப் 2020): “வெளிநாட்டில் வருமானம் ஈட்டி, அதன் மூலம் இந்தியாவில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் வரி விதிக்கப்படும்!” என்று புதிய விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் வருமானம் மற்றும் சொந்தமாக தொழில் நடத்தி அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை!” என்ற சர்ச்சை எழுந்தது. சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் “வெளிநாட்டு…

மேலும்...

ஒன்றும் புரியவில்லை – பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங் கருத்து!

புதுடெல்லி (02 பிப் 2020): நீண்ட நேரம் பட்ஜெட் வாசித்ததால் ஒன்றும் புரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மல சீதாராமனால் சமர்ப்பிக்கப் பட்டது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், மிக நீண்ட பட்ஜெட். அதனால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள வெக நேரம் தேவைப்படுகிறது என்றார். இதுதவிர காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய பட்ஜெட் வெற்று…

மேலும்...

இந்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (02 பிப் 2020): வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் இந்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்த வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே., “வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் வரி செலுத்தும் முறையில்…

மேலும்...

மத்திய பட்ஜெட் திருப்தியில்லை – ஸ்டாலின் அறிக்கை!

மத்திய அரசின் பட்ஜெட்டில் திருப்தியில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது….

மேலும்...

ஏமாற்றம்: மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து பங்குச் சந்தை படுவீழ்ச்சி!

மும்பை (01 ஜன 2020): மத்திய பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமான பட்ஜெட் என்பதால் மும்பை பங்கு சந்தை படுவீழ்ச்சி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவரது அறிவிப்புகளில் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கத்தக்க எவ்வித அம்சங்களும் இடம்பெறவில்லை என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை உயர்வை சந்தித்து, மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது…

மேலும்...

மத்திய அரசு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

புதுடெல்லி (01 பிப் 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 284 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.வேளாண் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த 16 கட்டங்களாக திட்டம் இயற்சி செயல்படுத்தப்படும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும். மத்திய அரசின் கடன் 52%ல் இருந்து தற்போது 48.7% ஆகக்…

மேலும்...