பாரசிடமால் கொடுப்பதற்கு லாக்டவுன் எதற்கு? – மன்சூர் அலிகான் கேள்வி!
சென்னை (01 மே 2020): “கொரோனா என்று பாரசிடமால் கொடுத்து கொஞ்சநாள் வைத்திருந்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்; இதற்கு எதற்கு லாக்டவுன்?” என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று…