லண்டனில் மர்ம நபர் போலீசாரால் சுட்டுக் கொலை!

லண்டன் (02 பிப் 2020): மர்ம நபர் ஒருவனை லண்டன் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். லண்டன் ஸ்ட்ரெட்ஹாம் பகுதியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய ஒருவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் தொடர்புடையவர்கள் வேறு யாரும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இன்று, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பரபரப்பு – துப்பாக்கியுடன் நுழைந்த நபர்: வீடியோ!

புதுடெல்லி (29 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக் போரட்டக் களத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த நினைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக…

மேலும்...