மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமானில், நேற்று 16 ஏப்ரல்…

மேலும்...
கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் விர்ச்சுவல் டூர்!

கூகுள் தொழில் நுட்பத்தில் கலக்கும் ஓமன் 360 விர்ச்சுவல் டூர்!

மஸ்கட் (05 மார்ச் 2024): ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும், சுற்றுலா தளங்களையும் 360 டிகிரி விர்ச்சுவல் டூர் வியூவில் மேம்படுத்தி வருகிறது ஓமன் அமைச்சகம். ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்.டி.சி.ஐ.டி.) மேற்பார்வையுடனும், ஓமனின் தேசிய ஆய்வு ஆணையம் மற்றும் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடனும் ஓமன் நாட்டின் அனைத்து சாலைகளையும் விர்ச்சுவல் வியூவில் அமைக்கும் அதிநவீன தொழில் நுட்பத்திற்கான திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே கடந்த…

மேலும்...

மஸ்கட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து!

மஸ்கட் (14 செப் 2022): மஸ்கட்டில் ஏர்ந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மஸ்கட்-கொச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் மஸ்கட் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறி புறப்படும்போது இறக்கையில் இருந்து புகை கிளம்பியது. அவசர கதவு வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...

ஓமன்(மஸ்கட்) அதிபர் மரணம்!

மஸ்கட் (11 ஜன 2020): ஓமன் நாட்டின் அதிபர் சுல்தான் காபூஸ் பின் சயீத் அல் சயீத்(79) உடல் நலக்குறைவால் காலமானார். வளைகுடா நாடுகளில் அதிக ஆண்டுகள் மன்னராக இருந்தவர் என்று பெயர் பெற்ற சுல்தான் காபூஸ், 1970 லிருந்து ஓமன் நாட்டின் மன்னராக இருந்து வந்தவர். இந்தியாவில் படித்த சுல்தான் காபூஸ் முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர். சங்கர் தயாள் சர்மா ஓமன் நாட்டிற்கு வந்தபோது, மரபை மீறி நேரடியாக விமான…

மேலும்...