மாடு கடத்தியதாக வதந்தி – முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

லக்னோ (22 மார்ச் 2022): உத்தரப் பிரதேசத்தில், மாடு கடத்தியதாகக் கூறி, பசுக் குண்டர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளின் கழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுநராக 35 வயது அமீர் என்பவர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...