அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி பறிப்பு!

சென்னை (22 மார்ச் 2020): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பால் வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இருந்தபோதும் அவ்வப்போது பாஜகவினரையே விஞ்சும் அளவுக்கு பாஜக ஆதரவு கருத்துக்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...