வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை (08 ஜூன் 2023): வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:- கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது மேலும் ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன்…