ரேஷன் கடைகளில் நாளை (திங்கள்) முதல் இலவச முகக்கவசம் -முதல்வர் தொடங்கி வைக்கிறார்!
சென்னை (26 ஜூலை 2020): தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்ககவசம் அணிவது அவசியமாகப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து…