அம்பானி வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முடிவு!
புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, அம்பானி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில்…