பஞ்சாயத்து தலைவராக வித்தியாசமாக பதவியேற்ற 70 வயது முன்னாள் தலைமை ஆசிரியர்!
கரூர் (10 ஜன 2020): கரூர் அருகே ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி, ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இருப்பினும் இவருடன்…