அதிர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் முடிவு – திருமாவளவன் கருத்து!

சென்னை (03 ஆக 2020): மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து முடிவெடுத்த தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை முடிவெடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக,தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மும்மொழிக்_கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம். அதே வேளையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில்…

மேலும்...

மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை – தமிழக முதல்வர் திட்டவட்டம்!

சென்னை (03 ஆக 2020): “தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில…

மேலும்...