கேள்விக்குறியாகும் முஸ்லிம் மாணவிகளின் கல்வி – பியுசிஎல் கவலை!
பெங்களூரு (10 செப் 2022): கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் நடவடிக்கையாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பான, ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியூசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் உத்தரவும், அதனை வழிமொழிந்துள்ள நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாரபட்சமற்ற கல்வி உரிமை, சமத்துவ உரிமை,…