இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!
கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது. இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும். Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம். இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.